ஆதிதிராவிட மக்களுக்கு 25 ஆண்டு காலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் புறக்கணிப்பு விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜூன் 4 -
வேலூர் மாவட்டம் இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் ஆதி திராவிடர் மக்களை 25 ஆண்டுகாலமாக புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 23 ம்தேதி வி.சி.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவிடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் க.கோட்டி(எ) கோ வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வேலூர் அடுத்த செம்பேடு கிராமத்தில் உள்ள ஆதிதிரா விட மக்கள் பல போராட்டங்கள் நடத்தி யும், உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளை பயனாளிகளுக்கு வழங்காமலும் ஆதிதிராவிட மக்களை 25 ஆண்டுகளாக அலைக்கழித்துக் கொண்டிருக்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நல வேலூர் வட்டாட்சியரின் மெத்தனபோக்கை கண்டித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 23.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலா ளர் க.கோட்டி(எ) கோவேந்தன் தலைமை வகிக்கிறார், மாவட்டத் துணைச் செயலா ளர் அ இளங்கோ வரவேற்புரை ஆற்று கிறார், வேலூர் மாநகர மாவட்ட செயலா ளர் வேலூர் பிலிப், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ம. சுதாகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் கா.அ. நாகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மலர்க் கொடி, மாவட்டத் துணைச் செயலாளர் வி.எஸ். பிரேம்குமார், வேலூர் தொகுதி செயலாளர் வி. விஜய சாரதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான சிபி. சந்தர், மாநில அமைப்புச் செயலாளர் நீல. சந்திரகுமார், வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ. செல்லப் பாண்டியன், வேலூர்& திருப்பத்தூர் மண்டல செயலாளர் இரா. சுபாஷ் சந்திரபோஸ், மண்டல துணைச் செயலாளர் சி. சஜித் குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். நீல உரிமை மீட்பு குழு மாவட்ட அமைப்பாளர் சி. வெங்கடேசன் நன்றி கூறுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய முகாம் அனைத்து சிறுத் தைகள் மற்றும் சமூக ஆர்வலர் களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக