நடு ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப் படும் பேருந்துகள் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வேலூர் , ஜூன் 4 -
வேலூர் மாவட்டம் போக்குவரத்து போலீசார் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இரும்பால் ஆன பேரி கார்டுகளுக்கு பதிலாக வளையும் தன்மை கொண்ட சாலை தடுப்புகளை கடந்த மாதம் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தடுப்புகளை கண்டுகொள் ளாமல், நடுரோட்டிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக