300 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கிய த. வெ. க கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர்!
திருப்பத்தூர் , ஜூன் 22 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி ஒன்றியம் காக்கங்கரை பஞ்சாயத்தில் இன்று காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் பிரபு அவர்கள் மற்றும் இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் இன்று சுமார் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்ன தானம் வழங்கப்பட்டது.
மற்றும் காக்காங் கரை பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன, மற்றும் 5 கிலோஅளவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் வீசி முனுசாமி அவர்கள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார், இந்நிகழ்வில் கட்சித் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர் கள் நிர்வாகிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக