கந்திலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
திருப்பத்தூர் , ஜூன் 22 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிபட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற 26 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை புரிய உள்ளார்.அதன் காரணமாக இன்று கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.வரவேற்புரை ஒன்றிய அவைத் தலைவர் ராஜா
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் வருகையை ஒட்டி என்ன நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் அரசு,ரகுநாத், ஜோதிராஜன் மற்றும் கந்திலி ஒன்றிய குழு சேர்மன் திருமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன்,செல்வி,
மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், தொழிலாளர் அணி அமைப்பா ளர் குலோத்துங்கன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக