உதகை கக்குச்சியில் அதிவேகமாக வந்த கார் மோதி சாலையில் நின்றிருந்த 4 பெணகள் படுகாயம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கக்குச்சி பகுதியில், சாலையில் நின்று கொண்டிருந்த 3 பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் ஒன்று மோதிய துயரச் சம்பவம் நேற்று மாலை நேரத்தில் நிகழ்ந்தது. இந்தக் கார்மோதலில் மூன்று பெண்கள் காயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாலை நேரத்தில் கக்குச்சி சாலையில் எதிர்பாராதவிதமாக ஒரு காரின் ஓட்டுநர் வேகமாக வந்தபடி சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்களின் மேல் நேரடியாக மோதிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திஉள்ளது
காயமடைந்தவர்கள்:
• மூன்று பெண்கள் காயங்களுடன் கோவை. மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
போலீஸ் நடவடிக்கை:
• சம்பவ இடத்துக்கு உடனடியாக உதகை போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
• கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
• “வாகன ஓட்டத்தில் கவனக்குறைவு, வேக எல்லை மீறல்” என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கக்குச்சியில் நடந்த இந்த துயரமான சம்பவம். வாகன ஓட்டுநர்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக