கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து- கார் ஷோரூம் ஊழியர் உயிரிழப்பு!
கோவை அவிநாசி சாலையில் ஹோப்ஸ் காலேஜ் அருகில் தனியார் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (33)என்பவர் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இன்று விற்பனை நிலையத்திற்கு தண்ணீர் நிரப்ப தண்ணீர் லாரி ஒன்று வந்தது. தற்போது பணியில் இருந்த பிரசாந்த் லாரி பின்னால் இயக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென லாரியின் சக்கரம் அங்கிருந்த ஸ்லாப் மேலே ஏறியது .இதில் ஸ்லாப் உடைந்து முழு தண்ணீர் லோடுடன் இருந்த லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் அருகே நின்று கொண்டிருந்த பிரசாந்த் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக