பரதராமி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 மா விவசாயிகள் மீது வழக்குப் பதிவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

பரதராமி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 மா விவசாயிகள் மீது வழக்குப் பதிவு!

பரதராமி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 மா விவசாயிகள் மீது வழக்குப் பதிவு!
குடியாத்தம் , ஜூன் 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கெங்கையம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாங்காய் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆந்திர மாநில அரசு தமிழக மாங்காய்களை  இறக்குமதி செய்ய விதித்த தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சித்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரத் திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாங்காய் விவசா யிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50 பேர் மீது பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad