நாளை மறுதினம் நடைபெற உள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று அத்தி கல்லூரியில் யோகா போட்டிகள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

நாளை மறுதினம் நடைபெற உள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று அத்தி கல்லூரியில் யோகா போட்டிகள் !

நாளை மறுதினம் நடைபெற உள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று அத்தி கல்லூரியில் யோகா போட்டிகள் !
குடியாத்தம் ,ஜூன் 18‌-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பாக வரும் ஜூன் மாதம் 21 அன்று குடியாத்தம் நகராட்சி பள்ளியில்  நடை பெற உள்ள உலக யோகா தின நிகழ்ச்சி  முன்னிட்டு  ஜூன் 18    யோகா போட்டிகள் அத்தி  கல்லூரியில் நடைபெற்றது இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபு ணர் டாக்டர்  சௌந்தரராஜன்   போட்டிகள் கலந்துக்  கொண்டு மாணவ மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர்  எஸ்.சௌந்தர்ராஜன் நிகழ்ச்சியில் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்குவெற்றி பெற  வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்தி இயற்கை மற்றும் யோகாமருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் தங்கராஜ் , அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.குமரவேல், அத்தி  செவிலி யர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை மற்றும் அத்தி மருத்துமனை யின் நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்போட்டி நடுவர்களாக அரசு பள்ளியின் யோகா ஆசிரியர்   ஜூரி  சிவகுமார் மற்றும்
டாக்டர் ஆனந்தி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறந்த முறையில் யோகா
செய்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத் தனர் . இதில்  பொது மக்கள்,  பல்வேறு பள்ளி மாணவர்கள்  , கல்லூரிகள் மாணவர்கள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.வெற்றி பெற்ற போட்டி யாளர்களுக்கு ஜூன் 21அன்று முன்னாள் மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  மற்றும் பிரபல திரைப் பட நடிகை நமீதா  மூலம் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என
அத்தி  கல்லூரி நிர்வாகம் இதனைத் தெரிவித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad