SC / ST பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் தங்ககும் விடுதி ஏற்படுத்த கோரி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

SC / ST பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் தங்ககும் விடுதி ஏற்படுத்த கோரி!

SC / ST பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் தங்ககும்  விடுதி ஏற்படுத்த கோரி!
குடியாத்தம் , ஜூன் 18 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வரு வாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை
துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார் நேர்முக உதவி யாளர் ரமேஷ் வரவேற்றார் இக்கூட்டத் தில் நகராட்சி ஆணையாளர் மங்கை யர்க்கரசன் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவிவசாய சங்க பிரதிநிதிகள் 

பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்கள் 
மா விவசாயிகளுக்கு முத்தரப்பு பேச்சு வார்த் தையின் மூலம் முழுமையான தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
வனவிலங்குகளிடமிருந்து விவசாயி களை காப்பாற்ற வேண்டும்வனவிலங்கு களால் ஏற்படும் நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்
பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்
நகர் பகுதியில் இருந்து எடுத்து வரும் குப்பை மற்றும் கழிவுகளை ஏறி குளம் குட்டைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்
நகரப் பகுதியில் கட்டிய முடிக்கப் பட்டுள்ள  3 சமுதாய கூடங்களை உடனே திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்

ஆம்பூர் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்கள்
இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் எம் சேகர் கே சாமிநாதன் பழனிவேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad