உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் 5,000 மரக்கன்றுகள் வழங்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் 5,000 மரக்கன்றுகள் வழங்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் 5,000 மரக்கன்றுகள் வழங்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர் , ஜூன் 5 -

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளால், ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, வேலூர் கிரீன் சர்க்ள், அணைக்கட்டு, ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது, 5,000 மரக்கன்று கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக் கும் விதத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், "பூமியின் வளம் அனைவரின் தேவைக் கும், என்ற உயரிய கருத்து பொது மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.".
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் இயக்குநரும் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தாளாளருமான டாக்டர் எம்.சுரேஷ்பாபு , தலைமை வகித்தார். அணைக்கட்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கி விழாவினை உற்சாகத்துடன் துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, வேலூர் கிரீன் சர்க்ள் பகுதியில், வேலூர் துணை காவல்துறை கண்காணிப்பாளரான பிரித்விராஜ் சவுகான், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவரும்,  டாக்டர்.ராஜ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழாவினை துவக்கி வைத்தனர்.மாணவர்கள் உற்சாக மாக பொதுமக்களுக்குமரக்கன்று களை வழங்கி. பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் பசுமை வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும், வேலூர் மாவட்டத் திலுள்ள ஆரணி மற்றும் கண்ணமங் கலம் ஆகிய இடங்களிலும் தலா 50 மாணவர்கள் பங்கேற்று 1,000 மரக்கன்று களை பொது மக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாக அலுவலர், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் மாணவர்களுடன் இணைந்து ஆர்வத் துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad