கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பனப் பாக்கத்தில் விரைவில் ஜவுளி பூங்கா அமைச்சர். ஆர்.காந்தி பேச்சு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பனப் பாக்கத்தில் விரைவில் ஜவுளி பூங்கா அமைச்சர். ஆர்.காந்தி பேச்சு!

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பனப் பாக்கத்தில் விரைவில் ஜவுளி பூங்கா அமைச்சர். ஆர்.காந்தி பேச்சு!
ராணிப்பேட்டை ஜூன் 5 -

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமை வகித் தார். ஒன்றிய செயலாளர்கள். பெ. வடிவேலு, எஸ்.ஜி‌.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்ரங்கன் வரவேற் றார். அப்போது அமைச்சர் காந்தி பேசிய தாவது:
 பனப்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவிகள் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலகமே போற்றும் வகையில் நல்லாட்சி நடந்து வருகிறது. ஜவுளி துறையில் சென்வாட் வரியை நீக்கி நெசவாளர்கள் வாழ்க் கையில் முன்னேற்றத்தை கண்டவர் முதல்வர் ஸ்டாலின். பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு நெசவு எந்திரங் களுக்கு 6 சதவீத வட்டி மானியம் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் திருவண்ணா மலை மாவட்டம் ஆரணியில் ஜவுளி பூங்காவும், வெகு விரைவில் பனப்பாக் கத்தில் ஜவுளி பூங்காவும் அமைக்கப்
படும் என அவர் பேசினார். இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர். சுந்தரமூர்த்தி, பனப்பாக்கம் டவுன் பஞ். தலைவர் கவிதா, அரக்கோணம் நகர செயலாளர். ஜோதி, ஒன்றிய செயலாளர். பசுபதி, நெமிலி நகர செயலாளர். ஜனார்த்தனன், இளைஞரணி நிர்வாகி. ராகேஷ் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பனப்பாக்கம் நகர செயலாளர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad