நகராட்சிக்குட்பட்ட நவீன ஆட்டு இறைச்சி கூட்டத்தில் மேற்கூரை விழுந்து விபத்து!
திருப்பத்தூர், ஜூன் 5-
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட நவீன ஆடு இறைச்சி கூடத்தில்பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு ஆடு இறைச்சி வியாபாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத நகராட்சி ஆணையர் உயிர் சேதம் எதுவும் ஏற்படு வதற்கு முன்பு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரி கள் கோரிக்கை சிசிடிவி காட்சி வெளி யாகி பரபரப்பு திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ராஜன் தெரு பகுதியில் உள்ள சி.எம். சுப்பிர மணி நாயுடு வளாகத்தில் நவீன ஆடு இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த நவீன ஆடு இறைச்சி கூடத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சி கடைக ளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த நவீன ஆடுஇறைச்சி கூடம் செயல்பட்டு வரும் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சி திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.
மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியும் பழுதடைந்து குடிநீரும் அசுதமாக உள்ளது. அதேபோல் ஆடு இறைச்சியின் கழிவுகள் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாயும் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் செல்லவழி இல்லாமல்வியாபா ரிகள் அவதிப்பட்டு வருவதாக ஆட்டு இறைச்சி வியாபாரிகள் புலம்புகின்றனர்.
மேலும் அதேபோல் அந்த நவீன ஆடு இறைச்சி கூடத்திற்கு மிக அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தேவைப்படக்கூடிய குடிநீரை நவீன ஆடு இறைச்சி கட்டிடத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப் படுகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாகவும் மேலும் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக பலமுறை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தும் ,மனு அளித்தும், கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என ஆடு இறைச்சி வியாபாரி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தினம்தோறும் வெட்டப்படும் ஒவ்வொரு ஆட்டிற்கும் நகராட்சி சார்பாக பணம் வசூலிக்கப்படும் நிலையில் எங்களுக்கு தேவையான கட்டிட வசதியும், குடிநீர் வசதியும் கழிவுநீர் கால்வாயும் அமைத்து தருவதற்கு நகராட்சி நிர்வாகம் அலைக் கழித்து வருவதாக புலம்புகின்றனர் மேலும் மீண்டும் கட்டிடத்தின் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு இறைச்சி வியாபாரிகள் கோரிக் கை விடுக்கின்றனர் மேலும் ஆடு
இறைச்சி கூடத்தின் மேற்கூறை பூச்சு பெயர்ந்து விழும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் மோகன் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக