ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜவல்லி பேட்டை கிராமம் பள்ளிக்கூட கட்டிடம் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் அகற்றப்படுமா
ஸ்ரீமுஷ்ணம் ஜூன் 23 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீபுத்தூர் ஊராட்சி அம்புஜவல்லி பேட்டை கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் பள்ளிக்கூட அருகாமையில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் உள்ள நிலையில் புளியமரம் எப்பொழுது வேண்டுமானாலும் வேரோடு சாயும் அவல நிலை உள்ளது இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதில் மிகவும் அச்சமாக உள்ளதாகவும் தற்பொழுது காற்று மழை அடிக்கடி வீசுவதால் பகல் நேரத்தில் பள்ளிக்கூட கட்டடத்தில் சாய்ந்து விடுமோ என அச்சமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ஸ்ரீமுஷ்ணத்தில் அரசமரம் வேரோடு சாய்ந்து இருவர் காயமடைந்ததும் ஒரு ஓட்டு வீடு தரமட்டமானது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக