நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் 53 ஆம் ஆண்டு பேரவை கூட்டம்
நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் 53 வது பொது பேரவை கூட்டம் இன்றைய தினம் அதாவது 29- 6 -2025 அன்று கோத்தகிரி (கோடநாடு )டெக்கன் வேலி ஹோட்டலில் நடைபெற்றது. திரு கே. மணி மாவட்ட தலைவர் அவர்கள் தலைமை தாங்கி இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தினார். முன்னதாக நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் மோகன முரளி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் உறுப்பினர்களான 42 அணியில் ஏறக்குறைய 35 அணியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இந்த ஆண்டுக்கான லீக் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்துவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உறுப்பினர்களின் ஆலோசனை பெற்று அதன்படி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் நடுவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றியும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அணிக்காக நீலகிரி மாவட்டத்திலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு கால்பந்து சங்க மாவட்ட தலைவர் திரு.கே. மணி மற்றும் தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவராக இருப்பதால் அதற்காக ஆவணம் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும் இக் கூட்டத்தில் கால்பந்தாட்ட வீரர்களின் நலனுக்காக நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பாக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொருளாளர்.திரு. என். நாகராஜ் அவர்கள் நன்றி உரையுடன் இக்கூட்டம் சிறப்பாக முடிவற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் என் வினோத்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குழு இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக