காட்பாடியில் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

காட்பாடியில் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை!

காட்பாடியில் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை!
காட்பாடி , ஜூன் 11-

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் வளர்மதி (வயது 54). இவரது தங்கை வேம்பு (வயது 52). இருவரது வீடும் அருகருகே உள்ளது. வேம்பு அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் கடந்த 6-ந் தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து நேற்று முன்தினம் வளர்மதி வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வேம்பு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து வேம்புவுக்கும், காட்பாடி போலீசாருக்கும் வளர்மதி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நகை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின் றனர் குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad