பரமக்குடி - சத்திரக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மானாமதுரை வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம், தெற்கு ரயில்வே அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

பரமக்குடி - சத்திரக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மானாமதுரை வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம், தெற்கு ரயில்வே அறிவிப்பு.


பரமக்குடி - சத்திரக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மானாமதுரை வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம், தெற்கு ரயில்வே அறிவிப்பு.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதல் சத்திரக்குடி வரையிலான அகல ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் முதல் மானாமதுரை சந்திப்பு வழியாக பல்வேறு ரயில் நிலையங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் : 16849/50 திருச்சிராப்பள்ளி - இராமேஸ்வரம் வரையிலான முன்பதிவில்லா விரைவு ரயில் வண்டி வரும் ஜூன் மாதம் 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 30ஆம் தேதிகள் மற்றும் ஜூலை மாதம் 1,2,3,4ஆம் தேதி வரை மானாமதுரை - இராமேஸ்வரம் இடையே ரயில் சேவையானது ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் இந்த வண்டியானது மானாமதுரையிலிருந்து மட்டுமே இயக்கப்படவுள்ளது. 


அடுத்ததாக வண்டி எண் : 56714 இராமேஸ்வரம் - மதுரை பயணிகள் வண்டி வரும் ஜூன் மாதம் 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 30ஆம் தேதிகள் மற்றும் ஜூலை மாதம் 1, 2, 3, 4ஆம் தேதி ஆகிய நாட்களில் இரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது, ரத்து செய்யப்பட்ட நாட்களில் இந்த இரயில் இராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2:40 மணியளவில் மதுரை நோக்கி முன்பதிவில்லாத விரைவு வண்டி இரயில் சேவையாக ஏற்கனவே உள்ள நிறுத்தங்களை வைத்து மதுரை வரை இயக்கப்படவுள்ளது.


அதனைத் தொடர்ந்து வண்டி எண்: 16734 ஓகா - இராமேஸ்வரம் விரைவு வண்டி வரும் ஜூன் மாதம் 17, 24ஆம் தேதி மற்றும் ஜுலை 01 ஆம் தேதி ஆகிய நாட்களில் 25 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.


மேலும் வண்டி எண்: 07696/95 இராமேஸ்வரம் - சார்லபள்ளி சிறப்பு விரைவு வண்டி வரும் ஜூன் மாதம் 13, 20 & 27 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமையன்று காலை இராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் வண்டியானது நேரம் மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே ரயில் பயணிகள் ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணங்களை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad