மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசை காலணியால் தாக்கிய மாரிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தியும்.
சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டால் ஏற்க மாட்டோம் என வலியுறுத்தியும்.மனித உரிமை ஆனையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் போக்குவரத்து கழக பணிமனையில் காளிபாளையத்தை சேர்ந்த கனோசன் (வயது 51) என்பவர் ஓட்டுனராகவும், கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (43) என்பவர் நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரால் தாக் கப்பட்ட கணேசன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓட்டுனர் தாக்கப்பட்டதை கண்டித்து தாராபுரம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும்
சிஐடியூ. டி.டி.எஸ். எப். எல் பி,எஃப் .ஏல்.டி பி,
சங்கத்தினர், ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர்கள் தாராபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு மதுரை கிளையைச் சேர்ந்த மேலாளர் மற்றும் தணிக்கையாளரை உடனடியாக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.மனித உரிமை மீரிய செயலை மீடியாவில் பார்த்துவிட்ட மனித உரிமை ஆனையமே நடவடிக்கை எடு நடவடிக்கை எடு பதாகைகளை கையில் ஏந்தி இன்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக