திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் M.K. முகமது உசேன் சாஹிப் நினைவாக நிறுவனர் தின விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 ஜூன், 2025

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் M.K. முகமது உசேன் சாஹிப் நினைவாக நிறுவனர் தின விழா.

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் M.K. முகமது உசேன் சாஹிப் நினைவாக நிறுவனர் தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதனை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. தொடர்ந்து 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் M.K. முகமது உசேன் சாகிப் அவர்களின் நினைவாக நிறுவனர் தின விழா மருத்துவமனை வளாகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நிறுவனர் தினத்தை முன்னிட்டு பொது மருத்துவர் டாக்டர் கார்த்திக் நாச்சியப்பன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிரஞ்ச், மகளிர் நல மருத்துவர் ஷரோன் ரோஸ் ஜோனட்டா, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜய்ரெக்ஸ், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அகமது யூசுப், நுரையீரல் மருத்துவர் டாக்டர் பாலா ஆகியோர் கலந்து கொண்ட இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவி விழாவிற்கு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் எம் கே எம் முகமது ஷாபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்ட மருத்துவ மனையின் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் P.ராஜன் கலந்து கொண்டார். 

இதில் நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த 500 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வில் மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், செல்வகுமரன், முகமது இப்ராஹிம் ஆகியோருடன் செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டினை ஷிபா மருத்துவமனை மார்க்கெட்டிங் பிரிவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad