சர்வதேச யோகா தினம் முன்னிட்டு உலக சாதனை புரிந்த 70 பயிற்சியாளர்களுக்கு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

சர்வதேச யோகா தினம் முன்னிட்டு உலக சாதனை புரிந்த 70 பயிற்சியாளர்களுக்கு

சர்வதேச யோகா தினம் முன்னிட்டு உலக சாதனை புரிந்த 70 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு!

காட்பாடி , ஜூன் ‌22 -

சுவாசம் இயற்கை யோகா மருத்துவ மனை , காட்பாடி ரெட்கிராஸ் சங்கம்,
இயற்கை நல வாழ்வியல் இயக்கம் இணைந்து யோகா விழிப்புணர்வு பயிற்சி‌ உலக சாதனை புரிந்த 70 பயிற்சியாளர் களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

வேலூர் மாவட்டம் சர்வதேச யோகா நாள் 11வது ஆண்டு விழா முன்னிட்டு சுவாசம் இயற்கை யோகா மருத்துவமனை, காட்பாடி ரெடகிராஸ் சங்கம்,   இயற்கை நல வாழ்வியல் இயக்கம்,  இணைந்து காட்பாடி காந்திநகர் சுவாசம் இயற்கை யோகா மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உலக சாதனை படைத்த 70 பயிற்சியாளர் களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்சிக்கு  ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன் தலைமை தாங்கினார். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர்  செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். இயற்கை நலவாழ் வியல் இயக்கத்தின் தலைவர் ம.தசரதன் முன்னிலை வகித்து பேசினார்.  மருத்து வர் ரமணன், திருவண்ணாமலை தபயோ கவனம் ஆசிரமத்தின் நிறுவனர் ந சானந் தா சுவாமிகள் வேலூர் ஈட்டுறுதி மருத்து வமனையின் இயற்கை மருத்துவ துறையின் உதவி மருத்துவ அலுவலர் மீரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்துகொண்டு பேசினர்.
இந்த ஆண்டில் கிங்டம் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் மூலம் சிறுவர் முதல் பெரியவர் வரை 70பேர் சிறப்பான வகையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். உலக சாதனை படைத்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழிப்புணர்வு பயிற்சி
               
 யோகா பயிற்சிகளை சுவாசம் இயற்கை யோக மருத்துவமனை மருத்துவர் டாக்டர் இரா.சந்தானலட்சுமி, டாக்டர் எஸ்.குமரன் ஆகியோர்  யோகாசங்களை செய்து காட்டி விளக்கம் அளித்தனர் அப்போது அவர் கூறியதாவது. யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும்.யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி. என்றார்..  யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள்.யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறை களில் முக்கியமான ஒன்றாகும். யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.  என்றார் மேலும் பல்வேறு யோக பயிற்சிகள் செயல் விளக்கம் அளித்தார். சர்வதேச யோகா நாள் (International Yoga Day) ஆண்டு தோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப் படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. 2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி யது.  முதல் சர்வதேச யோகா தினம்  முதல்முறையாக 2015, சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. இன்று 11வது ஆண்டு விழா 21.06.2025ல்  நடைபெற்று வருகிறது என்றார்.செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாராஜேந்திரன், சுவாசம் இயற்கை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஆர்.சுடரொளியன், துணை நிர்வாக இயக்குநர் துர்கா, மற்றும் குழுவினர் மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கினர்.  ரெட்கிராஸ் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு,  மேலாண்மைக்குழு உறுப்பினர் டாக்டர் வீ.தீனபந்து,    லயன் சங்க  மாவட்ட தலைவர் கே.பிரகாஷ் காட்பாடி காந்திநகர் வியாபாரிகள் சங்க தலைவர் திருமகள் செல்வமணி ஓய்வுபெற்ற தலைமயாசிரியை எஸ்.ஜெயலட்சுமி, ஆசிரியர் ஜெகன்நாதன், நவசாயி கோவில் நிறுவனர் ரவி, தலைமையா சிரியை எச்.சீதாலட்சுமி, பி.பாண்டியன், முல்லை, கே.எஸ்.எம்சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி மாணவர்கள்  யோகா பயிற்சியினை செய்தனர்.  மூன்று வயது முதல் 10 வயது வரை உள்ள மாணவர்கள் ஒரு நிமிடத்தில் 27 யோகாசனங்களை செய்து முடித்து உலக சாதனை படைத்தனர்.  மேலும் 30 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் நடன யோகா நடத்தினர். இந்த யோகா பயிற்சியில் பல்வேறு தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad