அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி 234 தொகுதிகளில் போட்டி நிறுவன தலைவர்.ஐசக் பேட்டி !!
ராணிப்பேட்டை ஜூன் 8 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தலைமை இடமாகக் கொண்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயல் பட்டு வருகிறது. இதன் நிறுவனத் தலைவர். டாக்டர்.ஐசக்ஐயாசெய்தியாளர் களை சந்தித்த போது அவர்கூறியதாவது
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் ஏனெனில் தென்னிந்தியாவில் அதிலும் வட மாவட்டகளில் செல்வாக்குமிக்க கட்சியாக இருந்து வருகிறது ஆகவே தகுந்த முக்கியத்துவம் தரும் கட்சிக்கு ஆதரவளிப்பது இல்லையென்றால் தனித்து போட்டி ஒன்றே முடிவாகும் என்ற தகவலை எடுத்துரைத்தார். அவர் மேலும் கூறியதாவது.தென்னிந்திய அளவில் மிக பெரும் சக்தியாக அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை 10ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் நடக்க இருக்கிறது இதில் பங்கேற்க 5 மாநிலங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் முக்கிய பிரமுகர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவர உள்ளன அவற்றில் பாலியல் தொல்லை தருபவர்களை கடுமையான சட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாக்க பட வேண்டும் டாஸ்மாக் விற்பனை ஒழிக்க வேண்டும் கள்ளச்சாராயம் ஒழிக்க வேண்டும் விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் கல்வி நிறுவனங் களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இதன் மூலம் ஏழை மாணவர் கள் பயனடைவார்கள். மேலும் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் அத்துடன் 10.5% இட ஒதுக்கீடு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம் ஆகவே இவை அனைத்தும் நிறைவேற ஆட்சி அமைப்பதே தீர்வாகும் என்றும் கூறினார்.அப்போது மாவட்ட செயலாளர் கள் ஸ்ரீதர் ஜெபக்குமார் மற்றும் ஆலோசகர். தேவசித்தம் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக