அரக்கோணத்தில் சு.ரவி எம்.எல்.ஏ அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஜூன், 2025

அரக்கோணத்தில் சு.ரவி எம்.எல்.ஏ அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு!

அரக்கோணத்தில் சு.ரவி எம்.எல்.ஏ அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு!!

அரக்கோணம், ஜூன் 8 -

 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் கூட்டுரோட்டியில் எம்.எல்.ஏ.சு.ரவியின் இளைய மகன் ஹரிஹரன் மற்றும் டாக்டர். வினோ ஐஸ்வர்யா மணமக்ககளின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் தலைமையேற்று நடத்தி வைத்தார். 
இவர் ரயில் மூலமாக எளிய முறையில் திருமணத்திற்கு வந்தடைந்தார். இதனை அரக்கோணம் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர். அம்மனூர். கே .ஆர். சீனிவாசன் வரவேற்று அவரை பாராட்டிய போது  கழக பொதுசெயலாளர். ஏளியமானவர் என மீண்டும் நிருபித்து விட்டார் . இவர் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தது போல்  மீண்டும் தமிழகத்திற்கு முதல்வராக வரவேண்டும் தாய்மார்களின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அவரை தொகுதி மக்கள் சார்பிலும் வரவேற்கிறேன் என கூறினார். ஒன்றிய செயலாளர். பழனி வழக்கறிஞர். லட்சுமணன், தூர்வாசலு வேலு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad