மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணி யாளர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை , ஜூன் -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனை த்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 8
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை முத்து கடை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர்கமலநாதன் முன்னி லை வகித்தார். மாவட்டத் தலைவர் சுந்தர ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சேதுபதி அவர்கள் கண்டன உரை ஆற்றி னார். அதில் போராட்டத்தின் கோரிக்கை களை குறித்து பேசினார்.
1, நியாய விலை கடைகளில் தற்போது ப்ளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்படுவதை முழுமையாக கைவிடு!.
2, விடுமுறை நாட்களில் நகர்வு பணி யினை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
3, நுகர் பொருள் வாணிப கழகத்தில் இருந்து சரியான எடையிட்டு வழங்கிடுக
போன்ற 8 அம்ச கோரிக்கைகளை குறித்து விளக்க உரையாற்றினார்கள்.
மேலும் இதில் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டக் குழு தலைவர் டாக்பியா மாவட்ட தலைவர்கள் பொன்னுரங்கன், ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலா ளர்கள்.தனசேகரன், ஸ்ரீராம் மற்றும் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழிய ர்கள் 200க்கும் மேற்பட்டோர்பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட போராட்ட குழு செயலாளர் தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 14-07-2025 முதல் கால வரை யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வோம் என தெரிவித்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக