ஈரோடு மாவட்டத்தில் 99 இடங்களில் சிறப்பு தொழுகை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

ஈரோடு மாவட்டத்தில் 99 இடங்களில் சிறப்பு தொழுகை


தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடைகளை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


இதில், ஈரோடு மாநகரில் வ. உ. சி பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.



ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன்


எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ருஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பி. பெ. அக்ரஹாரம் ஈதுகா மைதானம், தாருஸ் ஸலாம் மசூதி, அபூபக்ர் மசூதி, மஸ்ஜிதே தாய்யிபா, அல் முனீர் மசூதி, ரயில்வே காலனி மஸ்ஜிதே அல் அன்சார் மசூதி, கனராவுத்தர்குளம் ஜாமிஆ மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி, ஓடைப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கேஏஎஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்

ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad