ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி தெற்குத் தெருவில் வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் வேதனை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மேல்பாதி தெற்கு தெருவில் நேற்று பெய்த மழையால் மழைநீர் தேங்கி நிற்கும் அவல நிலை இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் ரோடு உள்ளதா என்பது பொதுமக்களின் கேள்வி பொதுமக்கள் ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்பதால் முதியவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளி செல்லும் சிறுவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் இதனால் அவ்வழியாக வயல்வெளிக்கு செல்லும் பொதுமக்கள் எங்கு ரோடு உள்ளது எங்கு பள்ளம் உள்ளது என்று தெரியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் பொழுது வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சூழ்ந்து தேங்கி நிற்பதால் ராமாபுரம் கொளத்தங்குறிச்சி கிராமங்களில் இருந்து கீழ் பாதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் வருபவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் தலைவர் நேரடி ஆய்வு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்து புதியதார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரப்படுமா ஏனெனில் பள்ளி மாணவர் மாணவர்கள் அதோடு ராமாபுரம் குலத்தங்குறிச்சி ஆகிய இடங்களுக்கு முக்கிய சாலையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக