சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் துறையினர் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நரசிம்மாவை கைது செய்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் துறையினர் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நரசிம்மாவை கைது செய்தனர்

 


சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் துறையினர்           ஆந்திராவைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நரசிம்மாவை கைது செய்தனர் 


கடலூர் மாவட்ட சிதம்பரம் உட்கோட்டம் டிஎஸ்பி திரு லாமேக் அவர்களின் அறிவுரையின்படி சிதம்பரம் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த தகவலின் பெயரில் 07- 06- 2025 அன்று மதியம் 0200 மணியளவில் அண்ணாமலை பல்கலைக்கழகம் ரெட்டை குளம் அருகே எதிரிகள்

1) கங்கி நரசிம்மா வயது 40/25 தபெ.கிருஷ்ணா வாரங்கல் ஆந்திரா.

2)ஆகாஷ்/த/பெ. மணிமேக்.எம்.கே.தோட்டம். வயது 24 

3)மகேஷ் த/பெ. மாரியப்பன்.

வயது.25.பள்ளிப்படை 

4)கிருபா நந்தன்.த/பெ.பன்னீர் பள்ளிப்படை வயது 32 மற்றும் (தலைமறைவானவர்கள்)

5) ராகுல் சிதம்பரநாதன் பேட்டை, 

6)கோகுல்ராஜ் (எ ) மல்லாட்டை 

7)சேரநீதி எம்.கே.தோட்டம் ஆகியோர் சேர்ந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வியாபாரத்திற்காக பிரித்து பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தபோது அண்ணாமலை நகர் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் மணிகண்டன் ராஜீவ் காந்தி ஞானப்பிரகாசம் ஆனந்த் ரமணி தமிழரசன் ஆகிய கொண்ட காவல் குழுவினர் மேற்படி எதிரிகளை வளைத்துப் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா 3- செல்போன்கள் கே டி எம் பைக் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


நீதிமன்ற காவலுக்கு மேற்படி நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


குறிப்பு இதில் நரசிம்மா ஆகாஷ் மகேஷ் ஆகிய மூவரும் ஏற்கனவே அண்ணாமலை நகரில் ஏப்ரல் மாதம்  கைப்பற்றப்பட்ட 21,500 கிலோகிராம் கஞ்சா வழக்கில் தொடர்புடைய எதிரிகள் என விசாரணையில் தெரியவந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad