தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் – அக்டோபர் 5 மாநாடு நடைபெறும், - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் – அக்டோபர் 5 மாநாடு நடைபெறும்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட தர்பியா மற்றும் பொதுக்குழுக் கூட்டம், முலகுமூடு லூனாபீனா ரிசார்ட்டில் மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் அன்சாரி, மாநில செயலாளர் சபீர் அலி, பேச்சாளர் இலியாஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். கூட்டத்தின் போது முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


முஸ்லிம் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை 3.5% லிருந்து 7% ஆக உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வக்ஃப் சொத்துகளை பாதுகாக்க உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் "ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் வரும்" என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது. “முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” எனும் செயல் திட்டம் நான்கு மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.


அக்டோபர் 5 அன்று மதுரையில் மாநில அளவிலான இளைஞர் மாநாடு நடைபெற இருப்பதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad