மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக பிரவின் குமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார்.இதற்கு முன் ஆட்சியராக இருந்த சங்கீதா மாற்றப்பட்டுள்ளார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக பிரவின் குமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார்.இதற்கு முன் ஆட்சியராக இருந்த சங்கீதா மாற்றப்பட்டுள்ளார்

 


மதுரை மாவட்ட ஆட்சியாளர் மாற்றம்


2017ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் பிரவீன் குமார். தேர்ச்சி பெற்றதும் முதலாவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் உதவி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து பல்வேறு பொறுப்பு வகித்த அவர், இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகமை (DRDA) திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக பதவி வகித்தார். கிராமப்புற மக்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பதில் முழுவீச்சில் செயல்பட்ட அவர், மாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்றார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்டம் முழுவது விரிவுப்படுத்துவதில் பிரவீன் குமார் ஐஏஎஸ் முக்கிய பங்காற்றி இருந்தார்.இதன் பிறகு பிரவீன் குமார் ஐஏஎஸ், 2023 ல் மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய அவர் சென்னை மாநராட்சி மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad