சேத்தியாத்தோப்பு அருகே விழுப்பெருந்துறை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 ஜூன், 2025

சேத்தியாத்தோப்பு அருகே விழுப்பெருந்துறை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு


கடலூர்மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே விழுப்பெருந்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நான்கு வழிச் சாலை வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடமானது இணைப்புச் சாலை இல்லாமல் இருப்பதால் ஆபத்து நிறைந்த மேம்பாலத்தின் வழியாக செல்லும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  


மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்  அனைவரும் மேம்பாலத்தின் வழியாகவே வரவேண்டிய சூழல் இருப்பதாலும், இங்கே அடிக்கடி விபத்துகளும் சில தினங்கள் முன்பு இருவருக்கு உயிரிழப்பும் நடந்ததால் பெற்றோர்கள் ஒருவித பீதியிலேயே இருக்கிறார்கள். தங்கள் பகுதிக்கான இணைப்புச் சாலையும், விழுப்பெருந் துறைபேருந்து நிறுத்தப் பகுதியில் உயர் மட்ட நடைபாதை பாலமும் அமைத்துத் தர வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையிலும், நெடுஞ்சாலைத் துறையினர் பல மாதங்களாக அதை செவிமடுக்காததால் இரண்டு உயிர்களை இழந்திருக்கிறோம் என்று குற்றம் சாட்டுகின்றனர். 


தற்போது அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் பொறுத்துப் பார்த்த கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்ததைக் கண்டு பொங்கி எழுந்தனர்.கிராமத்தின்  பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியல் செய்ய ஒன்று திரண்டனர். அப்போது காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில நாட்கள் அவகாசம் வேண்டும் எனகிராம மக்களிடம் தெரிவித்த போது அதற்கு கிராம மக்கள், இது போல் நாங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஒன்று கூடும் போதெல்லாம் இப்படி அவகாசம் கேட்டுத்தான் எங்களை கலைத்துவிடுகிறீர்கள்!. 


ஆனால் எங்களதுகோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை என்று தெரிவித்தனர். சில தினங்களில் இணைப்பு சாலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  உயர்மட்ட நடைபாதை பாலம் அமைத்துத் தர பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியதைடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் விழுப்பெருந்துறை கிராம பேருந்து நிறுத்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad