தமிழ்நாடு சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் அவர்களுடன் வேலூர் மாவட்ட சிறைமீண்டோர் நலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
வேலூர் , ஜூன் 8 -
வேலூர் மாவட்டம் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தபணிகள் துறை தலைமை இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் இயக்குநர் ஜெனரல் முனைவர் மகேஷ் வர் தயாள் அவர்களை மரியாதை நிமித் தமாக வேலூர் மாவட்ட சிறைமீண்டோர் நலச்சங்க செயலாளர் செ.நா.ஜனார்த் தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.தமிழ்நாடு சிறைமீண்டோர் நலச்சங்கத்தின் 104வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் இயக்குநர் ஜெனரல் அவர்களை நேரில் சந்தித்து வேலூர் மாவட்ட கிளையின் சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சிறைமீண்டோர் நலச்சங்கத்தின் இயக்குநர் (சட்டம்) எஸ்.ஞானேஸ்வரன் உடனிருந்தார்.
மேலும் வேலூர் மண்டல நன்நடத்தை அலுவலர்=எம்.ஹாஜாகமாலுதீன் தமிழ்நாடு மாநில முதன்மை நன்நடத்தை அலுவலராக கூடுதல் பொறுப்பேற்றார் அவரையும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து பேசினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக