ஸ்ரீவைகுண்டம் ஜூன் 9.தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஸ்வாமி நம்மாழ்வார் அவதார திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு வைகாசி திருவிழா மே 31 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9 ம் திருவிழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு விஸ்வரூபம் 4.15 மணிக்கு திருமஞ்சனம். 4.45 மணிக்கு தீபாராதனை. 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி. 6.30 மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன். விவேக். பாலாஜி ஆகியோர் ஸ்வாமி நம்மாழ்வார் பல்லக்கில் அலங்காரம் செய்தார்கள்.7.05 மணிக்கு ஸ்வாமி நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார்.7.45 மணிக்கு நாங்குனேரி ஜீயர் ஸ்வாமி வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது.
பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோபத்துடன் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. 9.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
இந்நிகழ்ச்சியில் நாங்குனேரி ஜீயர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் சதீஷ் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன் செந்தில் குமார் . காளிமுத்து.ராமலட்சுமி.
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக