மானாமதுரை பகுதிகளில் வழிபறியில் ஈடுபட்ட நபர்களையும், பயங்கர ஆயுதங்கள் சப்ளை செய்த நபரையும் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

மானாமதுரை பகுதிகளில் வழிபறியில் ஈடுபட்ட நபர்களையும், பயங்கர ஆயுதங்கள் சப்ளை செய்த நபரையும் கைது


மானாமதுரை பகுதிகளில் வழிபறியில் ஈடுபட்ட நபர்களையும், பயங்கர ஆயுதங்கள் சப்ளை செய்த நபரையும் கைது செய்த தனிப்படை போலீசார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிருங்காங்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக வழிப்பறியில் ஈடுபட்டதாக மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தை சேர்ந்த முகமது ரபிக்‌ மகன் பாரிஸ் ஆசான், மணிபாண்டியன் மகன்‌ ஆகாஷ், முனியாண்டி மகன் தினேஷ், கண்ணன் மகன் முருகப்பாஞ்சனை சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அதனைத் தொடர்ந்து மானாமதுரை காவல் நிலைய காவலர்கள் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கையில் இவர்களுக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் வாவா நகரை சேர்ந்த அருணாச்சலம் மகன் நயினார் என்பவர் ஆயுதங்களை தயார் செய்து கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து வழிபறியில் ஈடுபட உபயோகிக்க வைத்திருந்த ஆயுத சட்டத்தால் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களான 24 கத்திகள் மற்றும் 39 அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றிய காவல்துறையினர் ஐந்து நபர்களையும் சிறையில் அடைத்தனர்.


சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் அவர்களின் உத்தரவின் பேரில், மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் மானாமதுரை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், மானாமதுரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் குகன் மற்றும் ராஜதுரை, தலைமை காவலர்கள் கண்ணன், பிரபு மற்றும் செந்தில் குமார், முதல் நிலைக் காவலர் ஆனந்த், ராஜா, ராமச்சந்திரன், சங்கரமணிகண்டன், ராஜேஸ்வரன் சரத்குமார் மற்றும் மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்து சிவகங்கை மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு சுகுமார் கூறுகையில், இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும், குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் தயார் செய்து சப்ளை செய்து உதவும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad