தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் கிடா வெட்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் கிடா வெட்டு விழா

 


தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் கிடா வெட்டு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - மதுரை தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் உள்ள தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் வருகிற இருபதாம் தேதி கிடா வெட்டு விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு விசுவாவசு வருடம் ஆனி மாதம் நான்காம் தேதி புதன்கிழமையன்று சுபமுகூர்த்தகால் நடும் சடங்கு விழா சிறப்பாக நடைபெற்றது. வருடா வருடம் மேற்கொள்ளும் எக்கிடா வெட்டு விழாவினை முன்னிட்டு இந்த வருடம் மிகச் சிறப்பான முறையில் கிடா வெட்டு விழாவை முன்னெடுக்கும் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad