தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகி
அசாரூதீன் உதுமான் அலி, இணைச் செயலாளர் வினோத்குமார், பொருளாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ், ரம்யா ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை வரும் 22ம்தேதி முதல் ஜூலை 31ம்தேதி வரை கொண்டாடுவது. 22இடங்களில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வாகனம்
வழங்குதல் உள்ளிட்ட நல உதவிகள் வழங்குவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாபநாசம் தொகுதி அமைப்பாளர் தீனா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக