திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு தமிழிழும் அர்ச்சனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு தமிழிழும் அர்ச்சனை

 


திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும்  -திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பேட்டி.




வைகைச்செல்வன் செல்லக்கூடிய படகு தான் ஓட்டை விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் -திராவிட மாடல் நாயகன் தலைமையில் செல்லும் கப்பலில் எந்த ஓட்டையும் இல்லை - அமைச்சர் சேகர்பாபு.


திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோவில் குடமுழுக்கு 14ம் தேதிநடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான ஆலோசனைகளை கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர் தலைமையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு  திமுக ஆட்சியில் தான் அதிகமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்துதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு செல்ல  ரோப் கார் வசதிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறதுஎன தெரிவித்தார்.



பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என சீமான் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு


சீமான் நிறைய பேசினார் அதையெல்லாம் சொல்ல மாட்டீர்களே என செய்தியாக இடம் கேட்டு விட்டு இந்த ஆட்சி நடைபெற்ற பிறகு தான் அது குறித்து பழனியில் வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவித்து பழனியில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.இன்னார் சொல்லித்தான் நடத்தப்பட வேண்டும் என்று இல்லை. எங்கள் அறங்காவலர் குழுக்கள் ஆய்வு செய்து திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகுதான் இது நடந்ததாக கூறுவதற்கும் தானாக கனிகின்ற கனியையும் எங்களது மந்திரச் சொற்களால்தான் கனிந்தது என்று கூறுவதைப் போல் உள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு வரக்கூடிய கட்டணத்தில் 60 சதவீதத்தை வழங்கிய ஆட்சி. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழிலே அர்ச்சனை செய்யப்படும் என்று பதாகை வைத்து அர்ச்சகர் பெயரையும் அவரது கைபேசி எண்ணையும் அறிவித்த ஆட்சிதான்திராவிட மாடல் ஆட்சி.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இதுதான் திராவிட மாடல் ஆட்சி நாயகனுடைய கொள்கை.ஆகவே திருச்செந்தூரில் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு தமிழிழும் நடத்தப்படும் என தெரிவித்தார்.


திமுக  அரசு சார்பில் அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.ஆனால்நாங்கள் நடத்தும் மிருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளது குறித்த கேள்விக்கு



அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்திய போது எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்கவில்லை.கட்சி சார்பிலே எந்தவிதமான பேட்டியும் தரவில்லை.மதச்சார்புடைய எந்தவிதமான அடையாளமும் அங்கு பயன்படுத்தப்படவில்லை முழுக்க முழுக்க அறநிலையத்துறையின் பணி அது.நாங்கள் எங்கு சென்றும் வாகனத்தை ஏற்பாடு செய்கிறோம் அந்த மாநாட்டிற்கு வா என்று அழைக்கவில்லை.நாங்கள் ரசீது புத்தகத்தை அடித்துக் கொண்டு வசூலிக்கவில்லை.ரயிலை பயன்படுத்தி இலவசமாக கட்டண செலுத்தாமல் அனுமதிக்க வேண்டுமென கேட்கவில்லை.27 நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டிற்கு உண்மையான முருக பக்தர்கள் வந்தார்கள். இந்து அறநிலையத்துறை சார்பில்நடத்தப்பட்டமாநாட்டிற்கு முதல்வர் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட மாநாடு முழுக்க முழுக்க முருக பக்தர்களால் நடத்தப்பட்ட மாநாடு. ஆனால் இந்த மாநாடுஅரசியல் நோக்கத்தோடு அரசியலில் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு  இதுதான் மாநாடு  என்றால் பழனியில் நடைபெற்ற மாநாட்டிற்கு  என்ன பெயர் வைப்பது.இந்த ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்படக்கூடிய முதல்வர் மதத்தால்,மொழியால் இனத்தால் மக்களை பிரிக்க இந்த மண்ணிலே முதல்வர் அனுமதிக்க மாட்டார் அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.


தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதானம் சாப்பிடக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு இந்த ஆட்சி வந்த பிறகு தான் அனைத்து கோவில்களில் அன்னதானம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் 300 பக்தர்களுக்கு  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அன்னதானம் வழங்கக்கூடிய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad