குன்னூர் அருகே மரம் விழுந்து பெண் பலி..
குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை புதூர் ஆதிவாசி கிராமத்தில் வசிப்பவர் மல்லிகா வயது 49 இவர் இன்று காலை தகர செட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அப்போது வீட்டின் பின்புறம் இருந்த பெரிய மரம் தகர செட்டின் மேல் விழுந்ததில் மல்லிகா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்து வந்த மேல் குன்னூர் காவல் துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக