திருப்பூரில் சரக்கு வாகனத்தின் பின்புறத்தில் தொங்கி பயணம் செய்த தொழிலாளர்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

திருப்பூரில் சரக்கு வாகனத்தின் பின்புறத்தில் தொங்கி பயணம் செய்த தொழிலாளர்கள்



திருப்பூரில் ஆபத்தான முறையில் சரக்கு ஆட்டோக்களில் பயணம் செய்வது பற்றி திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் ஈ.பி.அ.சரவணன் மாநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்


திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் தொழிற்சாலைகள், நூற்றுக்கணக்கான பிரிண்டிங் ஆலைகள், சாய ஆலைகள் இயங்கி வருகின்றன.இந்த ஆலைகளுக்கு   வெளிமாநிலங்களிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லாரிகளில் துணி, நூல், அட்டை, பேப்பர்கள் மற்றும் மூலப் பொருட்கள் வந்து இறங்குகின்றன. அவ்வாறு கொண்டு செல்லும் போது, லாரி, வேன்களில் மூட்டைகளுக்கு மேல் அமர்ந்து ஆண், பெண் தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் 16-06-2025 ம் தேதி இரவு சுமார் 09.45 மணியளவில் அலுவல் பணி நிமித்தமாக திருப்பூர் இரயில் நிலையம் சென்று திரும்பிய இரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த சரக்கு வேன் பதிவு எண் ( TN 39 DD 6428 ) என்ற வேன் வேகமாக மேம்பாலம் வழியாக சென்றது அந்த சரக்கு வேனில் பின்புறம் மிக ஆபத்தான நிலையில் மூன்று  தொழிலாளர்கள் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர் பின் தொடர்ந்து சென்று வண்டியை நிறுத்த சொன்னபோது நிறுத்த வில்லை பின்னாடி தொடர்ச்சியாக துரத்தி சென்று மில்லர் பேருந்து நிறுத்தம் அருகில் சரக்கு வேனை தடுத்து நிறுத்தி ஏன் இப்படி வேகமாக செல்கின்றீர்கள் ஆபத்தான நிலையில் மூன்று தொழிலாளர்கள் தொங்கி கொண்டு வருகின்றனர் என கேட்டபோது உரிய பதிலளிக்க வில்லை இது தொடர்பாக ஓட்டுநர் மீதும் தனியார் லாரி சர்வீஸ் மீதும் 

ஆபத்தான நிலையில் செல்போன் பேசி கொண்டு சரக்கு வாகனத்தின் பின்புறத்தில் ஆபத்தான நிலையில் தொழிலாளர்களை அழைத்து சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்

சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், லாரிகள் போன்றவற்றில் ஆட்கள் பயணம் செய்யக் கூடாது என்று மோட்டார் வாகனச் சட்டம் தெளிவாக கூறுகிறது. 

  செக் போஸ்ட்களை கடக்கும்போது, விதிகளை மீறி இவ்வாறு ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆபத்தான முறையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad