தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் திருப்பூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக்பரீத் ஆகியோரின் ஆலோசனைப்படியும் இளைஞரணி அமைப்பாளர் கதிர் வழிகாட்டுதலோடு தாராபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் அபுதாஹிர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிக்கு தயாராக இருக்க மக்கள் பணிகளை துரித படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர இளைஞரணி இணை அமைப்பாளர் அமுல்ராஜ் முன்னிலை வகித்தார். 10-வது வார்டு செயலாளர் அப்துல்லத்தீப்,
துணைச்செயலாளர் பேச்சிமுத்து, நகர இளைஞரணி இணை அமைப்பாளர் ஜாஹிர்,நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நவீத் அகமது, தமிழரசன், 6-வது வார்டு செயலாளர் முஜீபுர் ரஹ்மான்,9-வது வார்டு செயற்குழு உறுப்பினர் சரவணன்,அஜ்மீர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக