புவனகிரி அருகே கும்மிடி மூளை கிராமத்தில் குடிநீர்தட்டுப்பாடு. குடிநீர் கேட்டு கிராம மக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

புவனகிரி அருகே கும்மிடி மூளை கிராமத்தில் குடிநீர்தட்டுப்பாடு. குடிநீர் கேட்டு கிராம மக்கள் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே குமுடி மூலை கிராமத்தில் சுமாராக1000 குடும்பத்தினருக்கும் மேல் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான குடிநீரானது கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில்
ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  இக்கிராமத்திற்கு மும்முனை மின்சாரம் கிடைக்காமல் இருமுனை மின்சாரம் மட்டுமே வருகிறது. கிராமத்தில்உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்ற முடியாமல் உள்ளது. மேலும் வீட்டில்
மின் சாதன பொருட்கள் இயங்குவதிலும் தடை ஏற்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  சரியான அளவில் மும்முனை மின்சாரத்தையும், தடை இல்லாமல் தண்ணீரையும் மாவட்ட நிர்வாகம் மற்றும்வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்பதே இவர்கள் வைக்கும் உடனடி கோரிக்கையாக உள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad