பந்தலூர் அருகே குந்தலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

பந்தலூர் அருகே குந்தலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


பந்தலூர் அருகே குந்தலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகிய சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பஜித்குமார் தலைமை தாங்கினார் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார் 


கூடலூர் மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்ற சௌந்தர்யா பேசும்போது மாணவர்கள் கல்வியை அக்கறையோடு படிக்க வேண்டும் எளிதில் புரிந்து படிப்பது மற்றும் நேரத்தை திட்டமிட்டு படிப்பதும் வெற்றிக்கு வழிகாட்டும். மாணவர்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். விளையாட்டு ஓவியம் நடனம் உள்ளிட்ட கலைகளிலும் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இதன் மூலம் உடல் நலன் மற்றும் மன்னன் அதனை பாதுகாக்க முடியும். பாட புத்தகங்களை முறையாக படிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக அமையும் என்றார்


சென்னை சவிதா பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவர் மற்றும் ஆராய்ச்சியாளர் முனைவர் அசோக்குமார் பேசும்போது கல்வியால் மட்டுமே நான் இன்று உயர்ந்த நிலைக்கு முன்னேறி இருக்கிறேன். ஏழ்மை நிலையில் இருந்தாலும், நான் அரசு பள்ளியில் படித்திருந்தாலும் இன்று என்னால் சாதிக்க முடிகிறது என்றால் என்னுடைய சுய முயற்சி, விடாத கடின உழைப்பும் ஆகும்.  எனவே மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு வாழ்வில் உயரவேண்டும் என்கிற அக்கறையுடன் படிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை தவிர்த்து விடாமுயற்சியுடன் படித்து முன்னேற வேண்டும். நன்றாக படித்தாலே பல்வேறு வகைகளில் உதவிகள் கிடைக்கும். என்றார். 


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad