பரலியார் பகுதியில் கழிவு நீர் நோய் தொற்றும் அபாயம்?
உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் இடத்தில் பர்லியார் என்ற பேருந்து நிறுத்தும் இடம் ஒன்று உள்ளது இங்கு எல்லா பேருந்துகளும் நிறுத்தி பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் தங்களின் உணவை முடித்துக் கொள்வார்கள் இது சகஜமாக நடப்பது. இதில் என்னவென்றால் இங்கு சுற்றுலா பயணிகளும் அவர்களின் வாகனத்தை நிறுத்தி தேநீர் மற்றும் தின்பண்டங்கள், பழங்கள் வாங்கி செல்வது வழக்கம். கழக பேருந்து பயணிகள் பர்லியாரில் பேருந்தை நிருத்தும் காரணத்தால் வேறு வழியின்றி இவர்களும் தேனீர் மற்றும் திறந்த வெளி தின்பண்டங்களை வாங்கி உண்பார்கள் ( குழந்தைகள் மற்றும் வயது முதியோர்க்காக ) மேட்டுப்பாளையம் உதகை இதன் நடுவில் பரிலியார் என்ற இடம் உள்ளது இங்கு சுகாதாரமற்ற நிலையில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது இதன் அருகில் திருக்கோவில் ஒன்றும் அதற்கு முன்னால் தேநீர் கடைகளும் உள்ளது இங்கு குப்பை கூலங்களுடன் கழிவு நீர் மற்றும் குப்பை பகுதியாக காணப்படுகிறது மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக களத்திலிருந்து செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக