திருமங்கலத்தை அடுத்த டி. கல்லுப்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தினுள் புகுந்து நள்ளிரவில் முகமூடி அணிந்த இருவர், கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு.
(அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் அங்கு உள்ள தனி அறையில் மறைந்து கொண்டார். காலை எழுந்தவுடன் சம்பவம் குறித்து துறை ரீதியான அதிகாரிகளிடம் கூறியுள்ளார்)
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தை , நேற்று இரவு முகமூடி அணிந்த இருவர் உருட்டுக்கட்டையுடன் உள்ளே நுழைந்து, காவல் நிலையத்தில் உள்ள கணினி மற்றும் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால், அங்கு பணியில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் செய்வது அறியாது அங்குள்ள தனி அறையில் மறைந்து கொண்டார். பின்பு அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் வெளியே வந்த அந்த போலீஸ்காரர் துறை ரீதியான அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என போராளி பிரபாகரன் என்ற பிரபாகரனை காவல்துறையினர் வழக்கம்போல் சோதனை செய்ய வீட்டுக்கு சென்ற போது, வீட்டில் இல்லாததால் அவரது தந்தையை காவல்துறை விசாரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
தான் வீட்டில் இல்லாத போது காவல்துறையினர் அத்துமீறி உள்ளே நுழைந்து தனது தந்தையை மிரட்டியதாக கூறி கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் , தனது கூட்டாளியுடன் நேற்று இரவு , முகமுடி அணிந்த இருவர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த காவலரை மிரட்டிய நிலையில், காவலர் தப்பி அங்குள்ள அறையில்பதுங்கிக்கொண்டார்.
தொடர்ந்து, ஆத்திரமடைந்த போராளி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது சம்பவம் குறித்து திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் சம்பவம் அறிந்து காவல் நிலையத்தை சென்று பார்வையிடசென்ற போது, பேரையூர் காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி காவல் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்.பி. உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முத்துலிங்காபுரம் என்ற இடத்தில் புளிய மரத்தின் அடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆர்.பி. உதயகுமார் உட்பட அவருடைய ஆதரவாளர்கள் 30 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
(போலீஸ் நிலையத்தினுள் சேதப்படுத்திய பகுதிகளை படம் எடுப்பதற்கு மீடியாக்களுக்கு அனுமதி மறுப்பு)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக