யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


 யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.


கூடலூா் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.


இக்கூட்டத்தில் தேவா்சோலை பேரூராட்சி மன்ற 11-ஆவது வாா்டு கவுன்சிலா் ஹனீபா, பாடந்தொரை உழவா் உற்பத்தியாளா் குழு செயலாளா் ரகுநாதன் மற்றும் கூடலூா் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனா்.


இதில் பாடந்தொரை அருகே செலுக்காடி பகுதியில் சுற்றித்திரியும் மக்னா யானையை பிடித்து முதுமலை முகாமுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். பாடந்தொரை நகர பகுதிக்கு காட்டு யானைகள் வராமல் கண்காணிக்க நவீன தொழில்நுட்பங்கள், கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்த வேண்டும். கடசனக்கல்லி முதல் உட்பரையா் எஸ்டேட் வரை அகழி அமைத்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad