நீலகிரி மாவட்டம் மருத்துவ குணம் நிறைந்த முடவாட்டு கால் கிழங்கு விற்பனை தீவீரம்
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் செல்லும் பகுதிகளில் பலரும் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் போன்றவைகளை விற்பனை செய்து வருகின்றனர் இதுதவிர கைவினை பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவைகளையும் விற்பனை செய்கின்றனர் இந்நிலையில், தற்போது இந்த வரிசையில் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையும் சுற்றுலா தலங்களுக்கு முன் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
ஊட்டியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் தற்போது பல்வேறு வகையான மருத்துவ குணம் நிறைந்த பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது கை மற்றும் கால், முட்டி போன்ற வலிகளை நீக்கும் மருத்துவ குணம் நிறைந்த முடவாட்டு கால் கிழங்கு விற்பனையையும் வியாபாரிகள் துவக்கியுள்ளனர்.
மார்கெட் காய்கறி கடைகளிலும் விறபனை செய்யபட்டு வருகிறது.
முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது..
முடவாட்டுக்கால் உடலில் உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது. கிட்டதட்ட 4000 நோய்களைத் தீர்க்கும் என்று சொல்கிறார்கள்
முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்.
எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் அதிகரிக்க செய்யவும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு பயன்படுகிறது.
மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி நிவாரணையாக செயல்படும்..
ஆர்தரைட்டிஸ் போன்ற இன்ஃப்ளமேஷன்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வது முடவாட்டுக்கால் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..
இந்த கிழங்கு மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லார் பண்ணையில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த கிழங்கினை தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பலரும் வாங்கி செல்கின்றனர்."
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக