திருமங்கலம் அருகே நாரையூத்துகுளம் குப்பை கூளங்களாக நிரம்பி துர்நாற்றத்துடன் அழியும் நிலை - குளத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை பஞ்சாயத்தில் உள்ள நாரையூத்து குளம், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான குளமாக உள்ளது.
இந்த குளத்தில் மழை நீர் தேக்கமடைந்து குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த நிலையில், தற்போது குளம் தூர்வாரப்படாமல் குப்பை கூளங்களாக நிரம்பி வருவதால், துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது எனவும், அவ் வழியே செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால், விபத்தில் சிக்கி தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆதலால், தமிழக அரசு உடனடியாக குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் , விபத்திலிருந்து தவிர்ப்பதற்கு குளத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக