பேரணாம்பட்டில் இரண்டு வீடுகளில் கேஸ் சிலிண்டர் வெடித்து நான்கு வீடுகள் முழுமையாக சேதாரம்!
பேரணாம்பட்டு , ஜூன் 2 -
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் மற்றும் பேர்ணாம்பட்டு நகரம் பாகர் உசேன் விதி-3ல் இன்று (02.06.2025) திங்கள் கழமை பிற்பகல் 1.10 மணியள வில் 1)பொன்னரசன், த/பெ சின்னப் பையன் என்பவரின் குடிசை வீட்டில் தீப்பற்றி அடுத்தடுத்த உள்ள 2)புஷ்ப ராணி, க/பெ பிச்சை முத்து, 3)மாணிக் கம்மாள், க/பெ.பெருமாள் 4)துரைசாமி த/பெ பொன்னுசாமி அவர்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்தனஇதில் மாணிக்கம்மாள் என்பவரின் வீட்டில் இருந்த கேஸ் சீலிண் டர் வெடித்து தீ மளமளவான பரவியது. இதில் மேற்கண்ட 4 வீடுகளும் முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த பணம், சான்றி தழ்கள் உட்பட அனைத்து பொருட்களும் முழுவதும் எரிந்து விட்டன.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு தீ முழுவதும் அணைக்கப்பட்டது
மேலும் கேஸ் சிலிண்டரின் பாகம் அடுத்த தெரு சின்ன பஜார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது வீழுந்த தில் காரின் பின்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. மேற்படி நிகழ்வில் உயிர் சேதம் ஏதுமில்லை. மேற்படி இடத்தினை பேரணாம்பட்டு வட்டாட்சியர் அவர்கள் பார்வையிட்டார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக