வசந்த் & கோ ஷோரூம் இல் வாடிக்கை யாளர்களுக்கு பரிசாக வழங்க வைத் திருந்த தங்க காயின் வெள்ளி காயின் மற்றும் பணம் கொள்ளை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

வசந்த் & கோ ஷோரூம் இல் வாடிக்கை யாளர்களுக்கு பரிசாக வழங்க வைத் திருந்த தங்க காயின் வெள்ளி காயின் மற்றும் பணம் கொள்ளை!

வசந்த் & கோ ஷோரூம் இல் வாடிக்கை யாளர்களுக்கு பரிசாக வழங்க வைத் திருந்த தங்க காயின் வெள்ளி காயின் மற்றும் பணம் கொள்ளை!
குடியாத்தம் , ஜூன் 02 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள வசந்த் & கோ ஷோரூமில் வாடிக்கை யாளர்களுக்கு பரிசாக வழங்க வைத் திருந்த தங்க காயின், வெள்ளி காயின் மற்றும் பணம் கொள்ளை கடையின் பின்புறமாக உள்ளே இறங்கிய மர்ம நபர் கைவரிசை.வசந்த் & கோ கடை மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப் பேட்டை பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசந்த் & கோ எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. இந்த வசந்த் & கோ எலக்ட் ரானிக்ஸ் கடைக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளது. இந்நிலையில்நேற்று இந்த வசந்த் & கோ எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் கிளையை  வழக்கம் போல் கடை ஊழியர்கள் திறந்துள்ளனர்.
அப்போது பீரோ உள்ளிட்ட பொருட்கள் திறந்து அலங்கோலமாக இருந்துள்ளது.
அதனை அவர்கள் பார்த்தபோது பீரோ வில் இருந்த 93 ஆயிரத்து 443 ரூபாயும், வாடிக்கையாளர்கள் டிவி, ப்ரிட்ஜ்,ஏசி உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு இலவசமாக தர வைத் திருந்த 16 தங்க நாணயங்களும் 40 வெள்ளி நாணயங்களும் திருடு போயி ருந்தது தெரியவந்தது. அந்த எலக்ட் ரானிக் ஷோரூம் இல் இருந்த கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஷோருமின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து கடையிலிருந்து பீரோவை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நாண யங்களை திருடி செல்வது பதிவாகி யுள்ளது. இந்த  திருட்டு சம்பவம் குறித்து அந்த ஷோரூமின் கிளை மேலாளர் சக்தி குடியாத்தம்  நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்ற பிரபல வசந்த் & கோ எலக்ட்ரானிக்ஸ் ஷோரூ முக்கு சென்று திருட்டு சம்பவம் குறித்து  குடியாத்தம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad