திருமங்கலம் - விமான நிலைய சாலையில் ரயில்வே தண்டவாளத்தின் மேற்பகுதி முன்னறிவிப்பின்றி நடைபெறும் பணிகளால் போக்குவரத்து நெரிசல்.
(ராட்சத கிரேன் மூலம் 32 டன் எடை கொண்ட இரும்பு கர்டரை தூக்கி அமைக்கும் பணி நடைபெறுவதால் பாதுகாப்பின்மை)
மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் மேம்பால பணிகள், 1 ஆண்டுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தின் மேல், ரயில்வே துறை சார்பில் நடைபெறும் மேம்பால பணி முன்னறிவிப்பின்றியும், பாதுகாப்பின்றியும் நடைபெறுவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தண்டவாளத்தின் மேற்பகுதியில் மேம்பால பணிக்காக ராட்சத கிரேன் மூலம் 32 டன் எடை கொண்ட இரும்பு கர்டரை தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வரும்போது, அவ்வழியே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணமாக செல்லக்கூடிய சிறுவர், முதல் முதியோர்கள் வரை சென்று வருவதால் முன்னறிவிப்பின்றி நடைபெறும் பணிகளில் பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்று வருவதால் அங்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதே போன்று 32 டன் எடையுள்ள 5 இரும்பு கர்டர்களை தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஆறு மணி நேரத்திற்கு மேலாக பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக