பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இன்று போக்சோ மற்றும் போதை பொருட்கள்   விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நெலாக்கோட்டை காவல்துறை மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர்  புளோரோ குளோரி தலைமை தாங்கினார் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் எடுத்துக் கூறினார். இந்த நிகழ்விற்கு நெலாக் கோட்டை காவல் ஆய்வாளர் சக்தி கலந்துகொண்டு .  போக்சோ குறித்த சட்ட திட்டங்களும் நாம் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், தகவல் தொடர்பு மற்றும் ஊடக சாதனங்கள் இடையே நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார். இதில்  ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் காவலர்கள் ராஜேஷ் கண்ணன் , சிந்து ஆசிரியர்கள் நிரோஷா, நிஷாத், மேகலா ஆகியோர் கலந்து கொண்டனர்  பட்டதாரி ஆசிரியர் மார்கெட் மேரி நன்றி கூறினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் ராஜேஷ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad