ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அங்கன் வாடி மையங்கள்!
வேலூர் , ஜூன் 3 -
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 25332 குழந்தைகளுக்கு விளையாட்டுடன்கூடிய கல்விக்கு அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங் கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், அவர்களும் இன்று (03.06.2025) தாராப்படவேடு அங்கன்வாடி மையத்தில் சீருடை, புத்தகம், ஆய்வு அட்டைஆகியவற் றை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில் குமார். 1 வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் செல்வி சாந்தி பிரிய தரிசினி, காட்பmடி வட்டார குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக