ஆசிரியர்களை ஒருமையில் பேசிய திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வருத்தம் தெரிவித்ததால் அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்!
வேலூர் , ஜூன் 6 -
வேலூர் மாவட்டம் ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ் திருவள்ளூர் மாவட் டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அவர்கள் ஆசிரியர்களை ஒருமையில் பேசியதை கண்டித்து வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுத்தனர்.மேலும் திருவள்ளுர் மாவட்ட ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் கருப்பு பட்டை அணிந்துபணிக்கு செல்லும் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பேச்சு வார்தைக்கு அழைப்பு விடுத்தார் அதனை ஏற்று ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் சா.ஞானசேகரன், இரா.தாஸ், சே.பிரபாக ரன், தியாகராஜன் ஜவகர், காத்வராயன், ஷேக்கபூர், இராஜாஜி கணேசன், பால சுந்தரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பேச்சுவாத்த்தையில் பங்கேற்றனர். இரண்டு மணிநேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட ஆட்சியர் தன்னு டைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருவள்ளூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அனை த்து போராட்டங்களும் இரத்து செய்துள் ளனர் எனவே வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப் பின் உயர்மட்டக்குழுவின் காணொலி வழியாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன். ஆ.ஜோசப்அன்னையா முகமதுஷா நவாஸ் மாவட்ட இணை அமைப்பாளர்கள் ஆர்.ஜெயகுமார், ஜி.டி.பாபு எஸ்.எஸ்.சிவ வடிவு, எம்.எஸ்.செல்வகுமார், ஜாக்டோ செய்தித்தொடர்பாளர் வாரா, உள்ளிட் டோர் பங்கேற்றனர். எனவே வேலூர் மாவட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் இரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக